கிளின்டன் வெற்றிபெற வேண்டி 1008 தேங்காய் உடைக்க தீர்மானம்
அமெரிக்காவில் எதிர்வரும் எட்டாம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஹிலரி கிளின்டன் வெற்றி பெற வேண்டி நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் 1008 தேங்காய் உடைத்து, மரியன்னை பேராலயத்தில் மெழுகுதிரி கொழுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இதனை ஏற்பாடுசெய்துள்ள வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,
அமெரிக்க அரச இயந்திரமே தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை நிர்மூலமாக்குவதில் முன்னின்று செயற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளதுடன், அதில் மாறுபட்ட கருத்துக்களுக்கு இடமில்லையென்றும் தெரிவித்துள்ளார்.
எனினும் நிர்கதியாகியுள்ள தமிழர்களுக்கு அமெரிக்காவினால் மாத்திரமே அரசியல் தீர்வு கிடைக்கும் என்றும் கூறும் சிவாஜிலிங்கம் அதனாலேயே தமிழ் மக்களுக்கு சார்பாக செயற்பட்டுவரும் ஹிலரி கிளின்டன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடி இந்த விசேட வேண்டுதல் பூஜைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே் கலந்துகொண்ட சிவாஜிலிங்கம்,அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஹிலாரி கிளின்ரன் வெற்றி பெற வேண்டும் என ஆசி கோரி இன்று மாலை நல்லூர் கந்தசுவாமி கோயில் மற்றும் யாழ் மரியன்னை பேராலயம் ஆகியவற்றில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன்போது 'விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதற்கும், இறுதிக்கட்ட போரின் போது ஒரு லட்சத்திற்கும் அதிகமான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கும் அமெரிக்காவே துணை நின்றதாக குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றது தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்