குண்டு துளைக்காத வாகனத்தை பயன்படுத்தியது கருணாவா?
கடந்த நாட்களில் மட்டக்களப்பில் கண்டெடுக்கப்பட்ட 800 மில்லியன் ரூபா பெருமதியான சொகுசுவாய்ந்த குண்டு துளைக்காத வாகனம் ஒன்றை முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கருணாஅம்மனினால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிப்பதாக நிதி மோசடி பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
வாகனத்தினுள் இருந்த ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திலிருந்து கருணா அம்மனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பல கடிதங்கள் மற்றும் பல ஆவணங்கள் நிதி மோசடி பிரிவினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கராஜ் ஒன்றினுள் கைவிடப்பட்ட நிலையிலேயே இவ்வாகனம் கண்டெடுக்கப்பட்டள்ளது.
இது பொதுமக்கள் பணம். இவ்வாறான அதி சொகுசுவாய்ந்த வாகனம் ஒன்றை விட்டுச் சென்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் ஊடகங்களினால் அறிக்கைகள் வெளியிட்டிருந்தன. எவ்வாறாயினும் மேலதிக விசாரனைகள் இடம்பெறும்.
ஒரு அறிக்கையின் படி இந்த அதி சொகுசுவாய்ந்த குண்டு துளைக்காத வாகனத்தை ஹொங்கொஹ் அரசாங்கத்தில் 2010ம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அதன் பெறுமதி ரூபா 78,633,385.00. வாகனத்தை கண்டுபிடித்த பின்னர் அது கொழும்பிற்க கொண்டு வரப்பட்டுள்ளதுடன் இவ்வாகனம் தொடர்பில் எவ்வித அறிக்கையோ அல்லது ஆவணங்களோ இல்லை.
இவ்வானகத்தை ஜனாதிபதி செயலாளரின் பெயரிலேயே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அது மோட்டார் வாகன திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை. எவ்வாறாயினும் கடந்த 28ம் திகதி நிதி மோசடி பிரிவினரால் கண்டெடுக்கும் வரை இவ்வாகனம் தொடர்பில் எவரும் அறிந்திருக்கவில்லை.