Breaking News

DEXA SCAN பரிசோதனை யாழ்.போதனாவில் ஆரம்பம்

வடக்கு– கிழக்கு மாகாணங்களிலேயே முதற் தடவையாக  யாழ் போதனா வைத்தியசாலையில் எலும்பு தேய்வடைதலை ஆரம்ப த்தில் கண்டுபிடித்து அவற்றுக்கு சிகிச்சையளிக்கும்  DEXA SCAN பரிசோதனை நேற்றையதினம் ஆரம்பி்க்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.


இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் 

எலும்பு தேய்வடையும் நோயானது (Osteoporosis – DEXA SCAN) வயது முதிர்ந்தவர்களில் குறிப்பாக மாதவிடாய் நின்ற பின்னர் பெண்க ளில் காணப்படுகின்ற ஒரு பிரச்சினையாகும். இது ஏற்படுவதற்கு பல்வேறுபட்ட ஹோர்மோன் குறைபாடுகள், நீண்ட கால சத்துக் குறைபாடுகள், பலவிதமான உடல் நோய்கள் மற்றும் சில வகையான மருந்துவகைகளை நீண்டகாலமாக உள்ளெடுத்தல் என்பன காரணமாக அமையலாம். 

இவ்வாறு எலும்பு தேய்வடையும் நிலையை ஆரம்பத்திலேயே இனங்கண்டு சிகிச்சையளிப்பதன் மூலம் எலும்புகள் முறிவடைதல் மற்றும் பல்வேறுபட்ட பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். இவ்வாறு எலும்பு தேய்வடைவதைக் கண்டறிவதற்கான சிறந்த பரி சோதனையாக அமைவது DEXA SCAN ஆகும்.

இவ்வளவு காலமும் எமது நோயாளர்கள் இப்பரிசோதனைக்கு உட்படுவதற்கு கொழும்பை நாடிச் செல்ல வேண்டிய தேவை யிருந்தது. இப் பரிசோதனை இயந்திரம் கிடைக்கப்பெற்று தொழிற்பட ஆரம்பித்துள்ளமையானது எமக்குக் கிடைத்த வரப்பிரசாத மென்பதில் ஐயமில்லை.