Breaking News

ஆவா குழுவின் பின்னால் இராணுவமா?



ஆவா குழுவின் பின்னர் ஸ்ரீலங்கா இராணுவம் செயற்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன அடியோடு மறுத்துள்ளார்.

யாழ். குடா நாட்டில் அச்சத்தை தோற்றுவித்துவரும் ஆவா குழு அப்பாவி மக்களிடம் கப்பம் கோரும் குழுவாக செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் – கீரிமலை பிரதேசத்தில் இடம்பெயர்ந்த ஒருதொகை மக்களுக்காக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட முழுமைப்படுத்தப்பட்ட வீடுகள் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன, ஆவா குழு தொடர்பான சர்ச்சைக்குப் பதிலளித்தார்.