Breaking News

நான் சீனாவின் நிதி­ய­மைச்சர் அல்ல..!!

நான் சீனாவின் நிதி­ய­மைச்சர் அல்ல. மாறாக இலங்­கையின் நிதி­ய­மைச்­ச­ரா­கவே உள்ளேன். அந்­த­வ­கையில் சீனத் தூதுவர் முன் வைத்­துள்ள விட­யங்­களை நிரா­க­ரிக்­கின்றேன் என்று நிதி­ய­மைச்சர்  ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.   


சீனா­வி­லி­ருந்து பெறப்­படும் கடன்­களின் வட்டி விகிதம் அதிகம் எனில் ஏன் தொடர்ந்தும் சீனா­விடம் இலங்கை கடன் கோர­வேண்டும் என்று கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இலங்­கைக்­கான சீன தூதுவர் ஷீ ஷியான்லேங் தெரி­வித்­தி­ருந்த கருத்து குறித்தே நிதி­ய­மைச்சர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

இது தொடர்பில் நிதி­ய­மைச்சர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது

இலங்­கைக்கு 2 வீதத்­தில்தான் கடன் வழங்­கப்­பட்­டுள்­ளது என்று சீன தூதுவர் தெரி­வித்­துள்ள கருத்­துக்­களை நிரா­க­ரிக்­கின்றேன். சீனா 2 வீத வட்­டியில் கடன் கொடுத்­தி­ருந்தால் இலங்கை 2 வீதம் மட்­டுமே செலுத்தும். 2 வீதத்­துக்கு அதி­க­மாக இலங்­கைக்கு கடன்­கொ­டுக்­க­வில்லை என்று சீனா கூறு­மானால் நாங்கள் மகிழ்ச்­சி­ய­டைவோம். காரணம் அப்­ப­டி­யானால் நாங்கள் 2 வீத வட்டி மட்­டுமே செலுத்­த­வேண்­டி­வரும்.

 சீன தூதுவர் முன்­வைத்­துள்ள விட­யங்­களை நிரா­க­ரிக்­கின்றேன் நான் சீனாவின் நிதி­ய­மைச்சர் அல்ல. மாறாக இலங்­கையின் நிதி­ய­மைச்­ச­ரா­கவே உள்ளேன். அந்தவகையில் . இந்த விடயங்களை ஆராய்ந்துவிட்டு சீன தூதுவரின் கருத்து தொடர்பில் விபரமான அறிக்கையை வெளியிடுவேன்.