அரசுக்கு சவால் விடுக்கும் ராவணா பலய
அங்கவீனமுற்ற இராணுவத்தினரின் உரிமைக்காக நாம் எதிர்வரும் திங்கட்கிழமை காலிமுகத்திடலிலிருந்து பாதயாத்திரையொன்றை நடாத்தவுள்ளோம். முடியுமானால் அதனை நிறுத்துவதற்கு பொலிஸார் வேண்டிய நீதிமன்ற உத்தரவை பெற்றுக் கொள்ளட்டும் என ராவணா பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தாகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் சவால் விடுத்தார்.
கொழும்பு கோட்டையில் குண்டு வெடிப்பதைப் பாதுகாத்த இராணுவத்தினர்தான் இன்று அதே இடத்தில் உட்கார்ந்து கொண்டு தமது உரிமைக்காக குரல் எழுப்புகின்றனர்.
எந்த நீதிமன்ற உத்தரவை பெற்றுக் கொண்டு வந்தாலும் அதற்கு முகம்கொடுக்க தயார் நிலையிலேயே நாம் பாதையில் இறங்கவுள்ளோம் எனவும் தேரர் மேலும் கூறினார்.
12 வருட சேவைக் காலம் முடியுமுன்னர் ஓய்வு பெற்ற அங்கவீனமுற்ற இராணுவத்தினர் தமக்கு ஓய்வுதியம் தருமாறு கேட்டு கடந்த 31 ஆம் திகதி போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இந்தப் போராட்டத்தை கண்காணிக்க நேற்று மாலை கொழும்பு கோட்டைக்கு வருகை தந்தபோதே தேரர் இந்த கருத்தை வெளியிட்டார்.