ஐரோப்பிய ஒன்றியத்தில் விக்னேஸ்வரன் முறைப்பாடு!
GSP பிளஸ் சலுகை வழங்கும் நடவடிக்கையை விசாரிப்பதற்காக கடந்த நாட்களில் ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினர் இலங்கை வந்திருந்தனர். அவர்களை சந்தித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். புகார் ஒன்றை கையளித்ததாக வடக்கு பத்திரிகையின் செய்திகள் குறிப்பிடுகின்றன.
வடக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் இராணுவத்தினரால் செயற்படுத்தப்பட்டு வருவதாக, வடக்கு முதல்வர் ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் ஆய்வுக் குழுவிடம் முறையிட்டுள்ளார்.
இவ்வாறு பாடசாலைகளை நிர்வகிக்க இராணுவத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இதுபோன்ற 344 ஆரம்பப் பாடசாலைகளில், 689 பெண் ஆசிரியர்கள் பணிபுரிவதாக குறிப்பிட்ட அவர், இந்தப் பாடசாலைகள் உண்மையில் வட மாகாண கல்வி அமைச்சின் கீழ இயங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் படையினர் இவற்றை நடத்திச் செல்வது 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு முரணானது எனவும் விக்னேஸ்வரன் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கூறியுள்ளார்.