Breaking News

உள்ளக விசாரணைகளில் சர்வதேச நீதிபதிபகளுக்கு இடமில்லையாம்..!!



நீதிப் பொறிமுறை குறித்த உள்ளக விசாரணைகளில் சர்வதேச நீதிபதிபகளை அரசாங்கம் ஒருபோதும் நாடாது என்ற தீர்மானத்தில் அரசாங்கம் திட்டவட்டமாக உள்ளது என ஊடகத்துறை பிரதியமைச்சர் கரு பரணவிதாரன தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டும் விடயத்தில் உள்ளக விசாரணை பொறிமுறையொன்று முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது. அந்த வகையில் அரசாங்கம் பொறுப்புக்கூறல் விடயத்தில் உள்ளக விசாரணையை முன்னெடுக்கும்.

அந்த பொறுப்புக்கூறல் விசாரணை செயற்பாட்டில் எக்காரணம் கொண்டும் சர்வதேச நீதிபதிகளை அரசாங்கம் உள்ளீர்க்காது மாறாக உள்நாட்டிலுள்ள நீதிபதிகளை கொண்டே நாங்கள் விசாரணை பொறிமுறையை முன்னெடுப்போம்.

கடந்த ஆட்சிக் காலத்தில் இலங்கையின் நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கையற்று காணப்பட்டனர். ஆனால் தற்போது நீதித்துறை சுயாதீனமானது என்பதை நாங்கள் நிரூபித்திருக்கிறோம். எனவே உள்ளக பொறிமுறைக்கு சர்வதேச நீதிபதிகள் அவசியம் இல்லை என்றும், எமது உள்நாட்டு நீதிபதிகள் இதனை சிறப்பாக செய்வார்கள் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.