Breaking News

வடக்கு மக்களின் ஆவேஷம் நியாயமானது – ஜனாதிபதி



இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை கட்டியெ ழுப்பவும், வறுமையை இல்லா தொழிப்பதற்குமே உலக நாடுகள் எமக்கு உதவி வருகின்றது. இதனாலேயே நாம் 2017 ஆம் ஆண்டை வறுமையற்ற நாடாக பெயரிட்டுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ். கீரிமலை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் கூறியுள்ளார்.

புரிந்துணர்வைக் கட்டியெழுப்பும் நடவடிக்கை கடந்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதனை சகல தரப்பினரும் பொறுப்புடன் இருந்து நிறைவேற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எமக்கிருக்கின்றது.

இதனை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் போது சில இடைஞ்சல்கள் ஏற்படலாம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ். பல்கலை மாணவர்கள் இருவருடைய மரணம் இடம்பெற்றது. இந்த நிகழ்வு நடந்த உடன் நான் பொலிஸ் மா அதிபருக்கு பக்கச்சார்பின்றிய விசாரணையை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டோம்.

யாழ். மாணவர்களின் மரணத்தில் போது இப்பகுதியில் ஒரு பதற்றமான நிலைமை நிலவியது. இது சாதாரணமானது. மனித இயல்பு அவ்வாறுதான் காணப்படும். நாமும் அவர்களது வேதனையை உணர்ந்தோம். வடக்கில் மாத்திரமல்ல, தெற்கிலும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றபோது, ருகுணு பல்கலைக்கழகத்தில் இதனை விடவும் பதற்றமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது எனக்கு நினைவிருக்கின்றது எனவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.