Breaking News

யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் தொடர்பில் சர்வதேசம் அழுத்தம் கொடுக்கவில்லை



யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் தொடர்பில் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுப்பதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

சர்வதேச யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் அவசியமில்லை என்பதனை சர்வதேசம் புரிந்து கொண்டுள்ளதாகவும் வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்புடன் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் மாற்றிக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் மூலம் சர்வதேச சமூகத்திற்கு இலங்கை மீதான நன்மதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அவர் புதிய அரசாங்கம் மனித உரிமைகளை மேம்படுத்தி மக்களின் ஜனநாயகத்தை நிலைநாட்டியதாகத் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளின் பேர்து சர்வதேச நீதவான்களுக்கு இடமளிக்கப்படாது என ஜனாதிபதி முன்னதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.