Breaking News

கிளிநொச்சி பொதுச் சந்தை தீ விபத்து- நஷ்ட ஈடு வழங்க அமைச்சரவை அனுமதி



கிளிநொச்சி பொதுச் சந்தை தொகுதியில், அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட, வர்த்தகர்களுக்கு நஸ்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இந்த தீ விபத்து தொடர்பிலான அனர்த்த மதிப்பீடுகளுக்கு என, நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுகளின் அடிப்படையில், இந்த நஸ்டஈடு வழங்கி வைக்கப்படவுள்ளது.

இந்நிலையில் பாதிப்புக்குள்ளான 122 கடைகளில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்ட வர்த்தகர்களுக்கு 74 மில்லியன் ரூபா நட்ட ஈட்டுத் தொகையினை பெற்றுக் கொடுப்பதற்கும், நவீன வசதிகளுடன் கூடிய தீயனைக்கும் பிரிவொன்றை 97 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ளது

அத்துடன் தீயினால் பாதிப்புக்கு உள்ளான கடைத் தொகுதியினை மீள நிர்மாணிப்பதற்கும், சுமார் 150 மில்லியன் ரூபா செலவில் நிலையான பொது சந்தை தொகுதியொன்றும் நிர்மாணிப்படவுள்ளது..