Breaking News

வடக்கில் இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகள்

வடக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் இராணுவத்தினரால் செயற்படுத்தப்பட்டு வருவதாக, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன், ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் ஆய்வுக் குழுவிடம் முறையிட்டுள்ளார். 

இவ்வாறு பாடசாலைகளை நிர்வகிக்க இராணுவத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இதுபோன்ற 344 ஆரம்பப் பாடசாலைகளில், 689 பெண் ஆசிரியர்கள் பணிபுரிவதாக குறிப்பிட்டுள்ள வடக்கு முதல்வர், இந்தப் பாடசாலைகள் உண்மையில் வட மாகாண கல்வி அமைச்சின் கீழ இயங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

ஆனால் அவ்வாறில்லாது படையினர் இதனை நடத்திச் செல்வது 13வது திருத்தச் சட்டத்திற்கு முரணானது எனவும் விக்னேஸ்வரன் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கூறியுள்ளார்.