ஜெயாவின் உடல்நிலை பாதிக்கப்பட காரணம் இதுவா?
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டதற்கு, யாரோ சிலர் பில்லி-சூனியம் வைத்தமையே காரணம் என லண்டனை சேர்ந்த ஆங்கில நாளிதழான டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் திகதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு தற்போதும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.இந்நிலையில், அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டமைக்கு பில்லி-சூனியம்தான் காரணம் என லண்டனை சேர்ந்த டெய்லி மெயில்செய்தி வெளியிட்டுள்ளது.தமிழகத்தை சேர்ந்த ஒரு பிரபல ஜோதிடர் ஒருவரை மேற்கோள்காட்டி இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஜெயாவிற்கு எதிரானவர்கள் சிலர் பணத்தை செலவு செய்து, அவருக்கு எதிராக செய்வினை மற்றும் பில்லி-சூனியம் ஆகியவற்றின் மூலம், அவரது உடல் நிலையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.
திமுக கட்சியில் மட்டுமல்ல. அவரது சொந்த கட்சியிலேயே கூட யாரவது இப்படி செய்திருக்கலாம் என்றும் ஜெயாக்கு பல எதிரிகள் இருப்பதாகவும் அந்த ஜோதிடர் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதேபோல், சமீபத்தில் கருணாநிதி உடல் நிலை பாதிக்கப்பட்டதற்கும் பில்லி-சூனியம்தான் காரணம் என அந்த ஜோதிடர் கூறியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.