லிங்க்டு இன் நிறுவனத்துக்கு போட்டியாக வேலைவாய்ப்பு துறையில் களமிறங்கும் பேஸ்புக்
சமீபத்தில் அறிமுகமான லிங்க்டு இன் நிறுவனம் வேலை தேடுவோர் வேலை வழங்குவோர் இருவரையும் இணைக்கும் தளமாக செயல்படுகிறது. இதன் மூலம் வேலை தேடுவோர் தங்களுக்குத் தேவையான தகவல்களை பெற முடியும். இதற்காக வேலை தேடுவோர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை லின்கடின் நிறுவனம் பெறுகிறது.
இந்நிலையில் லிங்க்டு இன் நிறுவனத்துக்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனம் களமிறங்கியுள்ளது. இதுதொடர்பாக பேஸ்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில் "சிறு வணிக நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் பேஸ்புக் பக்கத்தில் வேலை வாய்ப்பு குறித்த தகவல்களை வெளியிடுவதைப் பார்க்கிறோம்.
இது போன்று வேலை தேடுவோர்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு பேஸ்புக் பேஜ் அட்மின்களை உருவாக்கி இருக்கிறோம். இந்த பக்கத்தில் வேலை வாய்ப்பு பற்றி அறிவிக்கலாம். வேலைக்கான விண்ணப்பங்களையும் பெற்றுக் கொள்ளலாம். இந்த பேஜ் அட்மின் தற்போது சோதனைக் கட்டத்தில் உள்ளது. விரைவில் இது அறிமுகம் செய்யப்படும்" என்றார்.
பேஸ்புக்கின் இந்த புதிய முயற்சி லிங்க்டு இன் நிறுவனத்துக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.