Breaking News

ஐந்தாவது நாளாகவும் தொடரும் சுத்திகரிப்பு தொழிலாளர்களின் பணிப்புறக்கணிப்பு

யாழ் மாநகரசபை சுத்திகரிப்பு தொழிலாளர்கள் ஐந்தாவது  நாளாகவும் பணிப்புறக்கணிப்பு போராட்ட த்தில் ஈடுபட்டுள்ளனர்.


கடந்த 10 வருடங்களாக தொழில் ஈடுபடும் தம்மை நிரந்தரமாக்க கோரி கடந்த திங்கட்கிழமை முதல் பணி ப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.உரிய தீர்வு கிடைக்கும் வரை தொடர்ச்சியாக போராட்டம் நடை பெறும் எனவும் தெரிவித்தனர்.

இதேவேளை முதற்கட்டமாக 30பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படுமெனவும்அடுத்த கட்டமாக மற்றய வர்களுக்கு வழங்கப்படுமெனவும் மாநகர ஆணையாளர் தெரிவித்தபோதிலும் அதனை அவர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.அத்துடன் சுத்திகரிப்பு தொழிலாளர்களின் பணிப்புறக்கணிப்பால் யாழ்.மாநகர சபை க்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசுவதாக பல்வேறு தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.

இன்றைய தினம் இந்த தொழிலாளர்களை மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் நேரில் வந்து பார்வையிட்டு அவர்களின் பிரச்சினைகளை குறித்து கேட்டறிந்தார்.