Breaking News

கவலையில் மஹிந்த..!



காட்டிக்கொடுப்பாளர்களை அடையாளம் காண தவறிவிட்டேன் என முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுதப் போராட்டம் இடம்பெற்றது.

யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது யுத்தத்தை நிறுத்துமாறு சில மேற்குலக நாடுகள் என்னிடம் கோரிக்கை விடுத்தன. எனினும், தான் அந்த கோரிக்கையினை நிராகரித்து விட்டேன்.

இதன் காரணமாகவே மேற்கு நாடுகள் என்னுடன் சிக்கலுக்குள்ளாகியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை அந்த கோரிக்கையினை தாம் நிறைவேற்றியிருந்தால்,

இன்று அந்த மேற்குலக நாடுகள் தன்னுடைய நண்பனாக இருந்திருக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.