Breaking News

எத்தியோப்பியாவில் நெரிசலில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் பலி



எத்தியோப்பியாவில் மத விழா கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது.

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள எத்தியோப்பியாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள அட்டிஸ் அபாபாவின் தலைநகர் பிஷோப்டு. எத்தியோப்பில் ஒரோமியா மதத்தினர் அதிக அளவில் வசித்து வருகின்றன. அவர்கள் மழை முடியும் சீசனில் ‘இர்ரெசா’ என்ற ஆண்டு விழாவை மிகவும் பிரபலமாக கொண்டாடுவார்கள்.

இன்று இந்த விழாவை கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் பிஷோப்டு நகரில் கூடினார்கள். லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தபோது, அதில் பெரும்பாலானோர் அரசுக்கு எதிராக குரல் எழுப்பினார்கள். இதனால் மத கொண்டாட்ட விழா போராட்டமாக மாறியது. இதனால் போராட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் ரப்பர் குண்டால் சுட்டனர். அத்துடன் கண்ணீர் புகை குண்டையும் வீசினார்கள்.

இதனால் கூடியிருந்தவர்கள் அங்குமிங்குமாக சிதறி ஓடினார்கள். இதனால் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. பலர் அருகில் இருந்த கழிவுநீர் கால்வாயில் விழுந்தனர். பலர் கால் தடுமாறி கீழே விழுந்தனர். அவர்கள் கூட்டத்தில் மிதிபட்டு உயிரிழந்தனர். இப்படி 50-க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது.

கடந்த ஒருமாத காலமாக எத்தியோப்பியா அரசிற்கு எதிராக ஒரோமியா மதத்தினர் தங்களுக்கு அதிகப்படியான சுதந்திரம் வேண்டும் என்று போராடி வருவது குறிப்பிடத்தக்கது.