Breaking News

யாழில் 13 மாடிகளைக் கொண்ட இருதய சத்திரசிகிச்சை பிரிவு


யாழ்ப்பாணத்தில் 13 மாடிகளைக் கொண்ட பாரிய கட்டடத்துடன் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவொன்றை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டு ள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இதனை அமைப்பது தொடர்பில் சீனாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பாராளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை யாழ். மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய வினாவுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவை நிர்மாணிப்பதற்கு நிதி சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு பூர்த்தியாகியுள்ளன.இருந்த போதிலும் கட்டட நிர்மாணப் பணிகளுக்கான நடவடிக்கை ஒழுங்குமுறை பிரகாரம் ஆரம்பிக்கப்படவில்லை. இது குறித்து யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த போது பரவலாக ஆராய்ந்தேன்.

அத்துடன், குறித்த இருதய சத்திர சிகிச்சையில் பணியாற்றுவதற்கு 4 பேருக்கு கொழும்பிலுள்ள தேசிய வைத்தியசாலையில் பயிற்சி அளித்து வருகின்றோம் எனவும் சுகாதார அமைச்சர் கூறினார்.