Breaking News

சி.வியின் கருத்துக்கு இன்று பதிலளிக்கிறது மஹிந்த அணி



ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியின் மற்றுமொரு மக்கள் கூட்டமொன்று இரத்தினபுரி நகரில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் முதலாவது மக்கள் கூட்டம் நுகேகொடையில் ஆரம்பமாகியதோடு இம்முறை இரத்தினபுரியில் நடைபெறுவது மூன்றாவது மக்கள் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்கால அரசியல் நடவடிக்கை மற்றும் புதிய கட்சி உருவாக்கம் குறித்து விசேட அறிவிப்பொன்றை விடுப்பார் என்று தாம் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.

போராட்டத்திற்கு உயிரூட்டும் மக்கள் சக்தி என்ற தொனிப்பொருளில் இன்று மாலை 3 மணிக்கு இந்த மக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.



வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணியின்போது உரையாற்றியிருந்த கருத்துக்களுக்கு இன்றைய மக்கள் கூட்டத்தின் போது மஹிந்த ராஜபக்சவும், ஒன்றிணைந்த எதிர்கட்சியினரும் பதிலளிப்பார்கள் என்றும் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.