Breaking News

மாவீரன் கிட்டு திரைப்படத்திற்கு தேசிய விருது? பார்த்தீபன் நம்பிக்கை

‘வெண்ணிலா கபடி குழு’, ‘ஜீவா’ படங்களை
தொடர்ந்து மூன்றாவது முறையாக விஷ்ணுவை வைத்து ‘மாவீரன் கிட்டு’ என்ற படத்தை இயக்கியுள்ளார் சுசீந்திரன். 1987-ம் ஆண்டு, பழனியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஷ்ணுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, முக்கிய வேடங்களில் பார்த்திபன், சூரி, ஹரீஷ் உத்தமன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் சுசீந்திரன், நாயகன் விஷ்ணு விஷால் , நாயகி ஸ்ரீ திவ்யா , படத்தில் முக்கிய வேடமேற்று நடித்திருக்கும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், தயாரிப்பாளர் சந்திர சாமி, நடிகர் ஹரிஷ் உத்தமன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இயக்குநர் சமுத்திரகனி, பா.ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது, ” எனக்கு மிகவும் பிடித்த இடம் லயோலா கல்லூரிதான். என்னுடைய இரண்டு படங்களின்பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர்களை இங்கு தான் வெளியிட்டேன். இப்போது மீண்டும் நான் தயாரித்து இயக்கியுள்ள “மாவீரன் கிட்டு” திரைப்படத்தின் டீசரை இங்கு வைத்து வெளியிடுகிறேன். இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
மேலும் “நான் இயக்கிய அழகர் சாமியின் குதிரை திரைப்படத்துக்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது அதே போல் “ மாவீரன் கிட்டு” திரைப்படத்துக்கும் எனக்கு தேசிய விருது கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார்.

அவரைத்தொடர்ந்து இயக்குநர் சமுத்திரகனி பேசும்போது, “இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும் போது எனக்கு மாபெரும் போராளி மாவீரன் திலீபன் அவர்கள் தான் நினைவுக்கு வருகிறார். இயக்குநர் சுசீந்திரன் இப்படத்தின் மூலம் அழுத்தமான ஒரு பதிவை தமிழ் சினிமாவுக்கு வழங்குவார் என்று நினைக்கிறன்” என்றார்.


நாயகன் விஷ்ணு விஷால் பேசுகையில், “எனக்கு லயோலா கல்லூரி மிகவும் பிடித்தமான இடம். சினிமாவில் உள்ள எல்லோருக்கும் லயோலா கல்லூரிக்கும் கண்டிப்பாக தொடர்பு இருக்கும். எனக்கும் லயோலா கல்லூரிக்கும் என்ன தொடர்பு என்று கேட்டால் என்னுடைய மனைவி லயோலா கல்லூரியின் முன்னால் மாணவி ஆவார். நான் இப்படத்தின் மூலம் இயக்குநர் சுசீந்திரன் அவர்களுடன் மூன்றாவது படத்தில் இணைகிறேன். இப்படம் நிச்சயம் உங்கள் மனதை தொடும் ஒரு படமாக இருக்கும்” என்றார்.





முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்