Breaking News

விக்னேஸ்வரனின் முதலமைச்சர் பதவி பறிக்க சதித்திட்டம்..!!



வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியில் இருந்து உடன் விலக்க வேண்டும் அல்லது வடக்கு மாகாண சபையைக் கலைக்க வேண்டும் என்ற அழுத்தம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கொடுக்கப்பட்டு வருவதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் நடத்திய பேரணி இனவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் தூண்டுவதாக அமைந்துள்ளது என்றும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் தொடர்ச்சியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்த அழுத்தத்தைக் கொடுத்து வரும் நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் கோரிக்கை முன்வைக்கத் தீர்மானித்துள்ளனர் என்று அறியக்கிடைக்கின்றது.

யாழ். பேரணியை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச்சேர்ந்த இரு பிரிவினரும் ஒருமித்த நிலையில் எதிர்ப்பதால் இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிரதமரிடம் மேற்படி அழுத்தத்தை முன்வைக்கவுள்ளனர்.

நியூசிலாந்து சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதும்இந்தக் குழுவினர் அவருடன் விசேட சந்திப்பொன்றை நடத்தி வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை பதவியில் இருந்து நீக்குதல் அல்லது மாகாண சபையைக் கலைக்கும் கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.