Breaking News

மது அருந்துவதில் பிரச்சினையில்லை – ராஜித விளக்கம்



மதுசாரத்துக்கு அடிமைப்படாது போனால், அதனை அருந்துவதில் பிரச்சினையில்லையென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மதுசாரம் தொடர்பில் இருவேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்று ஒவ்வொரு சொட்டும் உடல் நலத்துக்கு கேடாகலாம் என்பது. மற்றது சில வைத்தியர்களின் ஆலோசனையின்படி சில நோய்களுக்கு மருந்து என்பது. இதிலுள்ள மோசமான நிலைமை என்னவென்றால், நன்மையைப் பெற்றுக் கொண்டு அதனை விட்டு விடாமல், அதற்கு அடிமைப்படுவதாகும்.

சிகரெட்டின் விலை அதிகரித்துள்ளதனால்,மாற்றீடாக மதுசாரத்தை அருந்தினால் நல்லது என அமைச்சர் ஜோன் அமரதுங்க பகிரங்கமாக தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.