Breaking News

பிளாட்டினம் பிரிவில் மஹேலவுடன் இணையும் மாலிங்க



பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் இடம்பெறும் வீரர்களுக்கான வரைவுப் பட்டியல் வெளியாகி யுள்ளது.

இந்த தொடருக்கான வீரர்கள் தேர்வு இந்த வாரத்தில் துபாயில் நடைபெற வாய்ப்புள்ளது.

இதில் வீரர்கள் பிளாட்டினம், டைமண்ட், கோல்ட் மற்றும் சில்வர் என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

கிளார்க், மெக்குல்லம், அலெக்ஸ் ஹால்ஸ், ஜாசன் ரோய், ஸ்டூவர்ட் பிராட், மலிங்கா, ஜெயவர்த்தனே, பொல்லார்ட் ஆகியோர் பிளாட்டினம் பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.

மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், அடில் ரஸ்சித் ஆகியோர் டைமண்ட் பிரிவிலும், சல்மான் பட், ரிச்சர்ட் லெவி, கேரி பேலன்ஸ், திரிமன்னே ஆகியோர் கோல்ட் பிரிவிலும் இடம்பெற்றுள்ளனர்.

மார்க் உட், டேவிட் வில்லி, குஷால் சில்வா, நிக்கோலஸ் போரான் உள்ளிட்ட 255 வீரர்கள் சில்வர் பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.

பிளாட்டினம் பிரிவில் உள்ள வீரர்களுக்கு 1.4 முதல் இருந்து 2.3 லட்சம் டொலர்களும், டைமண்ட் பிரிவுக்கு 70,000 முதல் 85,000 டொலர்களும், கோல்ட் பிரிவுக்கு 50,000 முதல் 60,000 டொலர்களும், சில்வர் பிரிவுக்கு 22,000 டொலர்களும் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.