அடுத்த முதல்வராக பிரபல நடிகர் அஜித் – பரவலாகும் ஜெயலலிதாவின் வாக்கு..?
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் சீக்கிரம் மீண்டு வர வேண்டும் என அதிமுக கட்சி தொண்டர்களும் பொது மக்களும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த விடயம் பற்றி அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்கள் நடை பெற்று வருகின்றது. அதில் ஒன்றாக பிரபல நடிகர் அஜித்குமாரை அடுத்த முதல்வராக ஜெயலலிதா நியமிக்கயுள்ளார் என்ற மிக பெரிய தகவல் வெளியாகியுள்ளது.
இது பற்றி அதிமுக வட்டாரத்தில், நடிகர் அஜித்குமார் எப்போதும் முதல்வருக்கு நெருக்கமானவராகவும் நம்பிக்கையுடையவராகவும் இருந்து வருகிறார்.
அதோடு அதிமுகவினருக்கும் அஜித்குமாரை அதிகம் பிடிக்கும். இதன் மூலம் அவர் அடுத்த முதல்வராக நியமிக்கபட வாய்ப்பிருக்கிறது என கூறுகின்றனர்.
மேலும் மக்களை ஈர்க்கும் நபரை முதல்வராக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். நடிகர் அஜித்குமாருக்கு மக்களிடத்தில் மிக பெரிய செல்வாக்கு உள்ளதை உணர்ந்தே முதல்வர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனாலும் அஜித்குமாருக்கு அரசியல் அனுபவம் இல்லை என்பதால் முதலில் ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பணியாற்றுவார் என்றும் பின்னர் அஜித்திடம் பொறுப்புகள் ஒப்படைக்கபடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.