Breaking News

ராஜபக்சர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை!



நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையடித்த ராஜபக்சர்கள் அந்த பணத்தில் வேறு நபர்களின் பெயர்களில் கொள்வனவு செய்த சொத்துக்கள் குறித்த தகவல்கள் வெளியாகின்றன. எனினும் குறித்த நபர்களால் அந்த சொத்துகளுக்கு தாம் உரிமையாளர்கள் அல்லவென கூறி கைவிட்டுச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான சம்பவம் நேற்றும் நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.

பசில் ராஜபக்ச தகவல் வெளியாகதென நினைத்து வேறு நபர்களின் பெயர்களில் பெற்றுக்கொண்ட, 20 கோடி ரூபா பெறுமதியான மல்வானை மாபிட்டிகம பிரதேசத்தில் 16 ஏக்கரில் உள்ள மாளிகை தொடர்பில் நேற்று நீதிமன்றில் விநோதமான சம்பவம் இடம்பெற்றுள்ளாது.

பணம் தூய்மையாக்கல் மற்றும் பொது சொத்துக்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டுகளுக்கமைய பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று பூகொட நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், அந்த பாரிய சொத்துக்களுக்கு தற்போது யாரும் உரிமை கோராமையினால் உரிமை தொடர்பில் பிரச்சினைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய குற்றம் சுமத்தப்பட்டுள்ள பசில் ராஜபக்சவுக்கு இது தொடர்பில் வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்காக எதிர்வரும் 7ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு பூகொட நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான டீ.ஏ.பத்திரனவினால் நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பசில் ராஜபக்ச கடந்த ஒரு தசாப்தத்தில் மல்வானை, மாப்பிட்டிகம பிரதேசத்தில் 16 ஏக்கர் காணி ஒன்றை 64 மில்லியன் ரூபாவுக்கு முதித ஜயகொடி என்பவரின் பெயரில் கொள்வனவு செய்துள்ளார்.

பின்னர் அங்கு 125 மில்லியன் ரூபா செலவில் மாளிகை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு நிர்மாணிப்பு பணி பூர்த்தி செய்யப்படாமல் இருந்தன. இது தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய நீதி தூய்மையாக்கல் மற்றும் பொது சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த காணியின் தற்போதைய பதிவாளரான முதித ஜயகொடிக்காக அவரது சட்டத்தரணி துசிர நீதிமன்றில் தகவல் வெளியிட்டிருந்தார்.

இற்த காணி குறித்த நபரின் பெயரில் உள்ள போதிலும் அவர் உரிமையாளர் அல்ல. அதனால் இந்த காணி தொடர்பில் எவ்வித உரிமையையும் அவர் கோர மாட்டார். எனவே இது தொடர்பில் சட்ட ரீதியான நிலைமை ஆராய்ந்து நீதிமன்ற உத்தரவொன்றினை எதிர்பார்க்கின்றோம். இந்த காணியின் உரிமையை அவர் கை விடுவதற்கு விருப்பம். இது தொடர்பில் அவர் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அறிவித்துள்ளதாக முதித ஜயகொடியின் சட்டதரணி குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் ஆஜராகியிருந்த சொலிசிட்டர் ஜெனரல் துசித் முதலிகே இந்த காணி தொடர்பில் உரிமை கூற முடியாதென்றால், அதன் விற்பனை பணத்தை வழக்கிற்கு எடுக்குமாறு அரசாங்கத்தின் கூறியிருந்தார்.

இதன்போது சட்டத்தரணி சஞ்ஜய ரணதுங்க அதற்கு எதிர்ப்பு வெளியிட்டதோடு காணி தொடர்பில் உத்தரவிடுவதென்றால் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றில் ஆஜராகியிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு தகவல்களை ஆராய்ந்த நீதிபதி பசில் ராஜபக்சவை எதிர்வரும் 7 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தார்.