தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம் இன்று வேலைநிறுத்தம்
தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தால், இன்று (08) பஸ் போக்குவரத்து நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்கப் போவதாக தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பல நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக தமது பஸ் போக்குவரத்து நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அச் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று (07) மஸ்கெலிய பிரதேச தோட்ட தொழிலாளர்களும் 1000 ரூபா சம்பளம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது