Breaking News

எமது நிலைப்பாட்டை கட்சியின் தலைவர் சம்பந்தன் எடுத்துரைத்தார் - சுரேஷ்

அண்மையில் இலங்கை வந்த ஐக்கிய நாடுகள்சபையின் செயலாளர் பான்கீமூன் அவர்களை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் சந்தித்த போது எமது நிலைப்பாட்டை கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் எடுத்துரைத்தார் என கடந்த ஞாயிறு நடைபெற்ற அதிர்வு நேரடி அரசியல் அரங்கில் கலந்து கொண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேசத்தினுடைய அனுசரணையோடு மேற்கொள்கின்ற முயற்சிகளை நம்பி நாங்கள் செயற்படுகிறோம். வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றாது போனால் எம்மை ஏமாற்றிய அரசாங்கத்தை இங்கு ஆட்சி செய்ய முடியாத நிலையை ஏற்படுத்துவோம் என்றும் வடக்கு கிழக்கில் அரச நிர்வாகம் செயலிழக்கும் நிலைக்குத் தள்ளப்படும் எனவும் சம்பந்தர் ஐ.நா செயலருக்குத் தெளிவாகத் தெரித்தார் என்று கூறுகின்ற சுரேஷ் பிரேமச்சந்திரன் சம்பந்தன் அவர்கள் தீர்வு நோக்கிய பயணத்தில் உள்ளூர எச்சரிக்கை உணர்வுடன் நடந்து கொள்கிறார் என்றும் தெரிவித்தார்.