தமிழ் மக்களின் சொத்துகளை கொள்ளையடித்து ஏப்பமிடும் முஸ்லிம் அமைச்சர்!
வன்னி இறுதிப் போரில் சிக்கிய பொதுமக்களின் வாகனங்கள் மற்றும் கனரக இயந்திரங்கள் தற்போது புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள தனியார் காணி ஒன்றில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
அவற்றின் தற்போதைய நிலைமைகள் குறித்து அறிய முற்பட்ட போது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரமானவையாக இருந்தன.
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்த பின்பும் தமிழ் மக்கள் இழந்த சொத்துக்களுக்கு முறையாக கட்டமைக்கப்பட்ட எவ்வித இழப்பீடுகளும் வழங்கப்படாத சூழ்நிலையில், இறுதிப் போரில் சிக்கிய தமிழ் மக்களின் பெரும் சொத்துக்களான வாகனங்கள் முறைகேடான முறையில் பழைய இரும்புக்காக பல கோடிகளில் விற்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கான பகிரங்க கேள்வி கோரல்களை கிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் விடுத்திருக்கவில்லை.
இந்நிலையில், இறுதிப் போரில் கைவிடப்பட்ட வாகனங்களை சிறீலங்காவின் வன்னி முஸ்லீம் அமைச்சர் ஒருவர் முறைகேடான முறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் காலப்பகுதியில் கண்டியைச் சேர்ந்த ஆஜ்ஜார் என்றழைக்கப்படும் தனியார் முஸ்லீம் தொழில் அதிபர் ஒருவருக்கு பல கோடிகளுக்கு விற்றுள்ளார்.
கடந்த இரண்டரை வருடங்களாக அந்த பல கோடி பெறுமதியான வாகனங்கள் பகுதி பகுதியாக பிரிக்கப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
எமது மக்கள் காலம் காலமாக விவசாயம் மற்றும் பல தொழில்கள் செய்து சிறுகச் சிறுக சேமித்து பெரும் கனவுகளுடன் வாங்கிய வாகனங்கள் இவை.
ஆனால், இன்று அந்த வாகனங்கள் உரிய மக்களிடம் சேர்ப்பிக்கப்படாமல் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன.
சிங்கள பிரதேசமான கொஸ்கம சலாவ இராணுவ படைத்தளத்தில் ஏற்பட்ட சிறு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அந்த அயற்சூழலில் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்கு ஓரிரு வாரங்களுக்கு உள்ளேயே உரிய இழப்பீடு நிவாரணங்கள் வழங்கி வைத்த அரசு தமிழ் மக்கள் விடயத்தில் இந்த நிமிடம் வரை இழப்பீடுகள் எதுவும் வழங்காமல் பாரபட்சம் காட்டி வருகின்றது.
நல்லாட்சி என்ற பெயரில் புதிதாக பதவிக்கு வந்த மைத்திரிபால தலைமையிலான அரசு கடந்த அரசின் ஊழல், நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை என்று கூறி தென்னிலங்கையில் அமைச்சர்களை கைது செய்து ஆணைக்குழுக்கள், நீதிமன்றங்கள் ஊடாக நீதி விசாரணையை முன்னெடுத்து வருகின்றது.
அதே போல் வன்னியில் இடம்பெற்ற இது போன்ற கொள்ளைகள் தொடர்பிலும் சரியான நீதி விசாரணை இடம்பெறுமா? அமைச்சர் கைது செய்யப்படுவாரா?