“தோட்டத் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே” ; கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வினைக்கோரி மலையகத்தின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பதுளை - நமுனுகுல பகுதியில் நூற்றுக்கணக்கான தோட்டத்தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா சம்பள உயர்வினை வலியுறுத்தி கறுப்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பல்வேறு பதாதைகளை ஏந்தி தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
“முதலாளி வர்க்கமே 1000 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடு”, கம்பனிக்காரர்களே சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் தோட்டத்தை அரசாங்கத்திடம் ஒப்படை”, “தோட்டத் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே” போன்ற பல பதாதைகளை தோட்டத் தொழிலாளர்கள் ஏந்தியிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கனவரல்ல பகுதியின் ஏழு தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.