விக்னேஷ்வரன் ஒர் இனவாதியல்லர்,மக்களைத் திருப்திப்படுத்த இனவாதம் பேசுகிறார்
வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் ஒரு இனவாதி என தான் கருதவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நான் அறிந்த முதலமைச்சர் என்றால், ஒரு இனவாதியென்று நான் கருதவில்லை. அவர் அரசியல் செய்கின்றார். தமது பிள்ளைகளுக்கு ஒரு தொழிலைக் கொடுக்காத அரசாங்கத்தில் இருந்து கொண்டு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் விக்னேஷ்வரனுக்கு உள்ளது.
இதனால், மக்களின் பிரச்சினையை மறக்கடிக்கச் செய்ய அவர் இனவாதத்தையாவது தூக்கிப் பிடித்துள்ளார் எனவும் மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.