யாழ்.வைத்தியசாலை படுகொலை; இன்று 29 ஆம் ஆண்டு நினைவு (ஆவணப்படம் இணைப்பு)
யாழ்ப்பாண வைத்தியசாலையில் 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 29 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிகள், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 21 பணியாளர்களும், சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்களுமாக 68 பேர் கொல்லப்பட்டனர்.
1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21 ஆம் திகதி இந்திய இராணுவத்தினர் வைத்தியசாலை மீது மேற்கொண்ட தாக்குதலில் 68 பேர் உயிரிழந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் யாழப்பாண போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.