முதல்வரானார் பன்னீர் செல்வம்
முதல்வர் ஜெயலலிதா இலாகா இல்லாத முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த துறைகள் அனைத்தும் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பொலிஸ்துறை உள்ளிட்ட அனைத்து இலாகாக்களும் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்படுவதாக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது