Breaking News

'தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்தவும்'

'தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்துவது தொடர்பில் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்' என்று பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 


இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், 'தமிழ்நாட்டில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்துவது குறித்து மத்திய அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும். அப்போதுதான், ஜெயலலிதாவால் முழுமையாக வைத்தியசாலை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். சட்டம் ஒழுங்கின் நிலை மிகவும் மோசமாக உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

 காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த செப்டம்பர் 22ஆம் திகதி இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக, அவர் சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் வீதியில் உள்ள அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் நீண்ட நாட்கள் அவர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று அப்பல்லோ வைத்தியசாலை நேற்று அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில், சுப்ரமணியன் சுவாமி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.