Breaking News

பாகிஸ்தான் பெண்ணை மணக்க சுஷ்மா சுவராஜிடம் உதவி கோரிய இந்திய வாலிபர்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர் நரேஷ் தேவானி. இவருக்கும் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி பகுதியை சேர்ந்த பிரியா பச்சானிக்கும் இந்த மாதத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. சமீபத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தீவிரவாத முகாம்கள் மீது நடத்திய தாக்குதலால் பாகிஸ்தான் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது.


இதனால் பிரியா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்தியா வருவதற்கான விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நரேஷ் தேவானி இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜிடம் ட்விட்டரில் இதுகுறித்து தெரிவித்து உதவி கோர, பதிலுக்கு சுஷ்மா சுவராஜ் அந்த இளைஞருக்கு உதவி செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று தெரிவித்துள்ளார்.