மகிந்த தலைமையில் நிச்சயம் அரசாங்கம் அமைப்போம்
மக்களின் முடிவுக்கு அமையவே புதிய கட்சியை ஆரம்பிப்பதா இல்லை என்று தீர்மானிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
புதிய கட்சியை தொடங்க இரத்தினபுரியில் கூட்டம் நடத்தப்படுகிறதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மக்களே எம்மை புதிய கட்சியை ஆரம்பிக்குமாறு கூறுகின்றனர். அப்படி இருந்தாலும் தற்போது அது நடக்காது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், கட்சியை ஆரம்பித்து மகிந்த ராஜபக்ஸ தலைமையில் அரசாங்கத்தை அமைப்போம் என்றார்.
ரணதுங்க குடும்பத்தினர் வெவ்வேறு கட்சிகளின் அங்கம் வகிப்பது குறித்து ஊடகவியலாளர் ஒரு கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அவர் பண்டாரநாயக்க குடும்பத்தினரும் அவ்வாறு வேறு கட்சிகளில் அங்கம் வகித்ததாக கூறினார்.
கையில் இருக்கும் 5 விரல்களுக்கு இணையான கத்தி போல் தான் அன்றும் இன்றும் என்றும் மகிந்த ராஜபக்ஸவுடனேயே இருப்பதாகவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.