சார்க் மாநாட்டை ஒருபோதும் புறக்கணிக்கவில்லை – அரசு
பாகிஸ்தானில் நடைபெறவிருந்த தெற்காசிய நாடுகளின் மாநாட்டில் இருந்து விலகவோ, அதனை புறக்கணிக்கவோ இல்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
தெற்காசிய நாடுகளின் மாநாடு தொடர்பிலான இலங்கையின் நிலைப்பாடு குறித்து, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தெற்காசிய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடு ஒன்று கலந்து கொள்ளாத பட்சத்தில், மாநாட்டை ஒத்திவைக்கும் நடைமுறை இருக்கிறது.
இதன்படி நான்கு நாடுகள் இந்த மாநாட்டை கலந்துக் கொள்வதில்லை என்று அறிவித்ததன் பின்னரே, இலங்கையும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்று தெரியப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.