யாழில் மீண்டும் பயங்கரம்: அச்சத்தில் மக்கள்
யாழ்ப்பாணத்தை பீதியடைய வைத்திருந்த வாள்வெட்டு கலாசாரமானது, பொலிஸார் மற்றும் நீதிமன்றங்களின் அதிரடி நடவடிக்கைகளால் குறைந்திருந்த நிலையில், அண்மைக்காலமாக மீண்டும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் மக்கள் மீண்டும் பீதியடைந்துள்ளனர்.
குறிப்பாக, நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு யாழ் நகரை அண்மித்த பகுதிகளில் முகமூடி அணிந்த கும்பலொன்று கையில் வாள், இரும்புத் தடிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிள்களில் சுற்றித் திரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் சிலர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், வாகனமொன்றின் கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.