Breaking News

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான உடன்படிக்கை நாளை கைச்சாத்து



தோட்ட தொழிலாளர்களின் ஒரு நாள் கொடுப்பனவை 730 ரூபாவாக அதிகரிக்கும் உடன்படிக்கை நாளை (14) கைச்சாத்திடவுள்ளதாக பிரபுக்கள் சங்கத்தின் தோட்டத் தொழிலாளர்கள் பிரிவு தலைவர் சுனில் பொஹொலியத்த தெரிவித்துள்ளார்.

இதன்படி, தோட்ட தொழிலாளர்களின் நாள் சம்பளம் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பன உட்பட்ட வகையில் 805 ரூபாவாக அதிகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழில்துறை மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சுக்கும் பிரபுக்கள் சங்கத்துக்குமிடையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.

கடந்த பல நாட்களாக ஒரு நாள் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி தோட்ட தொழிலாளர்கள் வீதியில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.