சுன்னாகத்தில் சற்று முன்னர் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில்
சற்று முன்னர் இனந்தெரியாத குழுவொன்று 2 பொலிஸார் மீது வாள் வெட்டுத் தாக்குதலை நடத்தி தப்பிச் சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் இருவரும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவருக்கு தலையிலும் மற்றயவருக்கு கையிலும் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வைத்து வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் என்.ஐ.பீ என அழைக்கப்படும் தேசிய புலனாய்வுதுறை உத்தியோகத்தர்கள் என தெரியவந்துள்ளது.
இன்று பிற்பகல் சுன்னாகம் பல்பொருள் அங்காடியொன்றுக்கு முன்னால் வைத்தே மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தேசிய புலனாய்வு அதிகாரிகளான கேகாலையைச் சேர்ந்த நிமால் பண்டார மற்றும் பி.எஸ். நவரத்ன ஆகிய தேசியப் புலனாய்வு அதிகாரிகளின் கைகளிலும், தலையிலும் வாள்களால் வெட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக சுன்னாகம் பகுதியில் ஏராளமான படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆயுதம் தாங்கிய விசேட அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு பாதுகாப்பு பன் மடங்கால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொலீசார்மீது ஏற்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மூடி மறைப்பதற்கும் பொலீசார்மீதுள்ள மக்களின் வெறுப்பை திசைதிருப்புவதன் கூடாக இராணுவ பிரசன்னத்தை அதிகரிப்பதற்குமான வேலைகளில் சிறீலங்கா புலனாய்வு பிரிவினர் தீவிரமாக செயற்பட்டுவருவது நோக்கத்தக்கது.
இதேவேளை நாளை யாழ் பல்கலைக் கழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டமொன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று பல்கலை வட்டாரங்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.