Breaking News

ஜெயலலிதா அவசரமாக சிங்கப்பூர் வைத்தியசாலைக்கு மாற்றம்?



தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூன்று வாரங்கள் கடந்தும் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வந்த அப்பல்லோ நிர்வாகம் கடந்த 7 நாட்களாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா, ஆங்கிலத்தில் பேசினார், மருத்துவர்களுக்கு நன்றி கூறினார், தண்ணீர் குடித்தார், வேக வைத்த ஆப்பிள் சாப்பிட்டார் என தினமும் பல்வேறான செய்திகள் வெளியாகி வருகின்ற அதே நேரம் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை தற்போது முன்னேறி வருவதாகவும், அவரை தற்போது உள்ள சூழ்நிலையில் சிங்கப்பூர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றால் விரைவில் குணம் பெற வைத்துவிடலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அப்பல்லோ வைத்தியசாலையிலிருந்து பிரதமர் அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவலில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் முழுவதும் குணமடைய இன்னும் எவ்வளவு நாள் ஆகுமென தெரியாது. சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலைக்கு மாற்றினால், ஓரளவு சீக்கிரம் குணமாக ஆக வாய்ப்பு உள்ளதாககவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மத்திய அரசு தரப்பில் இருந்து தமிழக அரசிடம் பேசியதாகவும், வெளிநாட்டுக்கு முதல்வர் ஜெயலலிதாவை கொண்டு சென்று சிகிச்சை அளிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், தமிழக அரசு ஒப்புதல் அளித்தால் அதற்கான சிறப்பு ஆம்புலன்ஸ் விமானம் ஏற்பாடுகள் செய்ய தயாராக இருப்பதாககவும் அப்பல்லோ வைத்தியசாலை தகவல்கள் தெரிவிப்பதாக இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.