Breaking News

ஆப்கானிஸ்தான்: ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது - 8 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் ராணுவ ஹெலிகாப்டரை தலிபான் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியதில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.


ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியான பக்லான் மாகாணத்தில் உள்ள டன்ட் கோரி மாவட்டத்தில் இயந்திர கோளாறால் ராணுவ ஹெலிகாப்டர் இன்று தரையில் விழுந்து நொறுங்கியதாகவும், இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும் ராணுவ செய்தி தொடர்பாளர் தவ்லத் வசிரி தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த ராணுவ ஹெலிகாப்டரை தலிபான் சபியுல்லா முஜாஹித் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியதில் 8 ராணுவ வீரர்கள் பலியானதாக அந்த இயக்கம் அறிவித்துள்ளது.