நண்பேண்டா 10 மில்லியன் ரூபாய்க்கு நுழைவு சீட்டு விற்பனை!!
கடந்த ஞாயிற்றுக்கிழமை , பிரபல இந்திய பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் , மற்றும் திரைப்பட இயக்குனரும், இசையமைப்பாளரும் , பின்னணி பாடகருமான கங்கை அமரன் உள்ளிட்ட இந்திய கலைஞர்களின் இசை நிகழ்வு நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியின் ஊடாக யாழ்.மாநகர சபைக்கு எட்டு இலட்சம் ரூபாய் வருமானம் கிடைக்க பெற்று உள்ளதாகவும் , அதில் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நுழைவு சீட்டு விற்பனை வரி மூலம் கிடைக்க பெற்றதாகவும் , இட வாடகையாக நாளொன்றுக்கு 11 ஆயிரம் ரூபாய் மூலம் மூன்று நாட்களுக்கும் அதற்கான 13 வீத வரி பணமுமாக 50 ஆயிரம் ரூபாய் வருமானமாக கிடைத்ததாகவும் , யாழ்.மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார்.
களியாட்ட நிகழ்வுக்கான நுழைவு சீட்டு விற்பனை பெறுமதியின் 7.5 வீதத்தை மாநகர சபை வரியாக அறவீடு செய்கிறது. ஆகவே வரி பணமாக 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கிடைக்க பெற்று இருந்தால் 10 மில்லியன் ரூபாய்க்கு நுழைவு சீட்டு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.