முல்லைத்தீவு விசுவநாதர் ஆரம்ப பாடசாலையில் 34 மாணவர்கள் புலமைப்பரிசில் சித்தி
முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு விசுவநாதர் ஆரம்ப பாடசாலையின் 34 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடை ந்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த பாடசாலையே புலமைப்பரிசில் பரிட்சையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது.
பாடசாலையின் மூன்று மாணவர்கள் 182 புள்ளிகளையும், 181 புள்ளிகளை பெற்று நான்காம் இடத்தையும் இந்த மாணவர்கள் பெற்றுள்ளனர்.
முரளிதரன் அபிசங்கர், முகுந்தன் தேனகன், சந்திரசேகரம் புகழ்வேந்தன் ஆகியோர் 182 புள்ளிகளைப்பெற்று முதலிடத்திலும் த.எழிலரசி 181 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் நான்காமிடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவநாதர் பாடசாலை முதலிடத்தை பெற்றுவருவதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.