யாழில் கடல் உணவகம் தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நீண்ட கால வாழ்வாதாரத்திற்கான வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்துமாறு கோரி கடல் உணவகம் தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
இவர்கள் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வெளிநாட்டு நிறுவனங்கள் குறுகிய காலத்திற்கு கடல் வள உணவு தொழிற்சாலைகளை ஆரம்பித்து அதனை விரைவாக மூடிவருவதாகவும், இதனால் தமது வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்துமாறு கோரியுமே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.