Breaking News

சார்க் அமைப்பு தோல்வியடைந்தால், மாற்றுவழி குறித்து கவனம் – பிரதமர்

சார்க் அமைப்பு தோல்வியடைந்தால், அதன் அனைத்து உறுப்பினர்களினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் பலன்களை கொடுக்கத் தவறினால் வேறு மாற்று வழி குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


நியூசிலாந்தின் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று(03) நடைபெற்ற விசேட கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக் காலமாக சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு இடையில் சில முரண்பாட்டு நிலைமைகள் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நியூசிலாந்து விஜயத்தை முடித்துக்கொண்ட பிரதமர் இன்று மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா புறப்பட்டுச் செல்கின்றார்.