Breaking News

சம்பந்தனை புகழ்ந்து பேசிய பிரதமர் ரணில் - பின்னணி என்ன..?



தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய இரா.சம்பந்தனை பிரதமர் ரணில் விக்ரமசிங்க புகழந்து பேசியுள்ளார்.

நான்கு நாள் விஜயமாக நியூசிலாந்துக்கு சென்றுள்ள பிரதமர் நேற்று மாலை ஒக்லண்டில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளை, சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு மெட் அல்பிரட் யுத்த ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. நியூசிலாந்து எதிரக்கட்சி தலைவர் உள்ளிட்டவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதன் போது உரையாற்றிய பிரதமர், தேசிய அரசாங்கமானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிறுவப்பட்டமைக்காக மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்தில் நாட்டு மக்களை பிரதிநிதிதுவம் செய்யக் கூடிய பல அரசியல் கட்சிகள் உள்ளமையினால் தேசிய அரசாங்கத்தை கொண்டு நடத்துவதில் இலகுவாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கையில் கூட்டு எதிர்க்கட்சி ஒன்று இருப்பதாகவும் இவர் இந்த சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனை இந்த சந்திப்பின் போது பிரதமர் புகழ்ந்து பேசியுள்ளார். இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான இரா.சம்பந்தன் தனக்கு முன்னதாகவே பாராளுமன்றத்துக்கு வந்துவிட்டார்.

அதாவது, 1977ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே அவர் பாராளுமன்றத்துக்கு வந்துவிட்டார். அவர் மிகவும் நேர்மையான மனிதர்.

நியாயமான செயற்பாடுகளுக்காக எந்தநேரமும் ஒத்துழைப்பு நல்குவார். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு முன்மாதியாக திகழ்கின்றார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி தலைவரை புகழ்ந்து பேசியுள்ளார்.