ரணில் – சம்பந்தன் இடையில் இரகசிய ஒப்பந்தம்
“ஒற்றையாட்சியைச் சிதைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பும் அரசியல் தீர்வை வழங்குவதற்கு ரணில் – சம்பந்தன் இடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாயணக்கார இவ்வாறு குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.
அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் மைத்திரி – ரணில் அரசின் உருவாக்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்தது எனவும் எனவும் பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போது அவர் தெரிவித்தார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:
“தமிழர்களுடைய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கிறோம்.
ஆனால், நாட்டைப் பிரிக்காமல் ஒற்றையாட்சிக்குள் அதற்கன தீர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், அந்த ஒற்றையாட்சியைச் சிதைக்கும் வகையில் அரசாங்கம் தற்போது காய் நகர்த்துகின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் கைச்சாததிடப்பட்டுள்ள இரகசிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒற்றையாட்சியைச் சிதைக்கும் வகையில் உள்ளது. இதற்கு அனுமதி வழங்கப்படாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.