Breaking News

ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகராக நிமால் லெகே



சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு ஆலோசகராக, சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரி நிமால் லெகே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற மூத்த பிரதி காவல்துறை மா அதிபரான நிமால் லெகே, முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு, வெடிபொருட்களை கையாளுதல், தீவிரவாத முறியடிப்பு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்.

இவர் இஸ்ரேல், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் பயிற்சிகளை பெற்றவர் என்பதுடன், வெளிநாடுகளில் இடம்பெற்ற கருத்தரங்குகளிலும் பங்கேற்றவர்.

கிழக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்ட அனுபவம் வாய்ந்தவர்.

நெருக்கடியான காலகட்டங்களில் சிறிலங்காவின் உயர்மட்டத் தலைவர்களைப் பாதுகாப்பது, மற்றும் நாடாளுமன்றம், விமான நிலையம் உள்ளிட்ட கேந்திர நிலைகளின் பாதுகாப்புத் திட்டங்களை வகுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.