யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கொலையை கண்டித்து, வட மாகாணத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
வடக்கின் சகல அரச, தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுள்ளதோடு, அரச மற்றும் தனியார் பேரூந்துகளின் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.