பாராமுல்லா பயங்கரவாதிகள் தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் 46ஆர்.ஆர் ராணுவ முகாம் அருகே பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்டனர்.
ராணுவ முகாம் அருகே உள்ள பொது மக்கள் கூட்ம் பூங்காவில் நுழைய முயன்றனர். இதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இதனால், ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
பாராமுல்லா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வந்த இந்த துப்பாக்கிச் சூடு தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.